தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது.
2016-18-ஆம் கல்வியாண்டுக்கு முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் அரசு இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன
கலந்தாய்வில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அரசு இடங்கள் 48, சுயநிதிக் கல்லூரிகளில் 37 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவ இடங்கள் 12 என மொத்தம் 97 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். மே 31-ஆம் தேதிக்குள் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, நேர்காணல் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
[wp_ad_camp_4]