பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு பரமதத்தத்தர் புனிதவதியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 6 மணிக்கு பரமசிவன் பவளக்கால் விமானத்தில் வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபடுவார்கள். அதே நாளில் அமுதுபடையலும் நடைபெறும்.
குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மாங்கனி திருவிழாவில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்யும் பக்தர்கள், இறைவன் மீது வீசப்படும் மாங்கனிகளை பிடித்து பிரசாதமாக சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பிள்ளை வரம் பெற்றவர்கள் மன மகிழ்ச்சியோடு தங்களின் வாரிசுடன் அடுத்த ஆண்டே காரைக்கால் வந்து இறைவனை தரிசனம் செய்து மாங்கனியை இறைத்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நாளை நாளை முதல் 14, 15, 16, 17 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. மாங்கனித்திருவிழாவில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் காரைக்காலுக்கு வருகை தர தொடங்கி விட்டனர்.
காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவரை நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார்.
ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார் சிவன். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார். அதற்கு சிவனடியார் ‘‘அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!” என்றார்.