தமிழ் நாட்டின் கிரிக்கெட் திருவிழாவான தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது.
ஐபிஎல் போன்றே பெரிய தொடராக, ஆனால் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையைக் கண்டறியும் வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து, உலகக் கோப்பை தொடர் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போன்று மாநிலங்களுள் நடைபெறும் வகையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 டி20 கிரிக்கெட் தொடர் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.