புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது.
இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.