மற்றவர்கள் என் வயதில் அம்மா ஆகும்போது நான் பாட்டி ஆகிவிட்டேன்: ராய் லட்சுமி சந்தோஷ ட்வீட்!

என் வயதில் பெரும்பாலான பெண்கள் மிகச் சிறந்த அம்மாக்கள் ஆகும் போதும், இங்கே நான் பாட்டி ஆகிவிட்டேன்… என்று சந்தோஷ ட்வீட் போட்டிருக்கிறார் நடிகை ராய் லட்சுமி.

தனது டிவிட்டர் பதிவில், பூனைக்குட்டிகள் இரண்டை மார்புடன் அணைத்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ராய் லட்சுமி, தான் குழந்தை போல் வளர்த்த செல்லப் பூனைக்குட்டி இரண்டு குட்டிகளைப் போட்டிருப்பதைத்தான் அவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது ட்வீட்…