ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள்

மூளை முதல் மலக்குடல் வரை…உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

நுரையீரல் – இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

கல்லீரல் – மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

பாதம்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி – மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

பாதம், விரல் வலி சரியாகும்

தமிழ் தினசரி வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் மருத்துவ குறிப்புகள் பிறர் சொல்வதைக்கேட்டும்,நமக்கு வந்த தகவலை உங்களுக்கு தருகிறோம்
பொதுவாக மருத்துவகுறிப்புகளை
விபரம் அறிந்தவர்களிடம் உறுதி செய்துகொள்ளுங்கள் ,அந்த கால பெருசு என நீங்கள் ஒதுக்கும் அந்தப் பெரியவர்களிடம் கேட்டு நன்கு தெளிவு படுத்திக்கொண்டு பயன்படுத்தி நலம் பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories