கலைந்த சுபஸ்ரீயின் கனடா கனவு! வருத்தத்தில் பெற்றோர்!

உள்ளூர் செய்திகள் சென்னை
pallikkaranai accident subasri died - 2026

சுபஸ்ரீயின் தலையில் மட்டுமல்ல.. கனவிலும் இடியாய் வந்து விழுந்து.. எல்லாவற்றையும் நொறுங்கி போக வைத்த பேனர்.

குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானிநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ. 23 வயதுடைய சுபஸ்ரீ, பிடெக் படித்துள்ளார். துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வழக்கமாக டூவீலரில்தான் வேலைக்கு சென்று வருவார்.

நேற்று அவ்வாறு செல்லும், வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் மேல விழுந்தது. சுபஸ்ரீ கீழே நிலைகுலைந்து விழுந்தார். அப்பொழுது வேகமாக வந்த தண்ணி லாரி சுபஸ்ரீ மீது மோதியது இரு கைகளிலும் ஏறிய லாரி, அவரது தலையிலும் ஏறி இறங்கி நின்றது.

சுபஸ்ரீயின் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு இரு கைகளாலும் தூக்கி சென்று ஓடியும், வழியிலேயே உயிர் போனது.

உயிரிழந்த சுபஸ்ரீக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது. அது கனடா போவது என்பதுதானாம். வேலை விஷயமோ அல்லது மேல்படிப்போ எதுவானாலும் கனடாவில் சென்று அதை செய்ய வேண்டும் என்றுதான் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது.. கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்கான தேர்வை எழுதிவிட்டு டூவீலரில் வரும்போது இந்த விபத்தில் பரிதாபமாக உயிரை இழந்துள்ளார்.

கனடா போவதுதான் என் ஆசை என்று அடிக்கடி சுபஸ்ரீ சொல்லி கொண்டே இருப்பாராம், ஆனால் இப்படி அவரது கனவு நொறுங்கி போகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி சொல்லிக் கதறி கதறி அழுகிறார்கள் அவரது நண்பர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.