nanguneri - 2026

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் வாக்களிக்க வசதியாக இந்தத் தொகுதிகளில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் சூறவாளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!

இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவை இடைத் தேர்தலை முன்னிட்டு, இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதே நேரம், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending