04/07/2020 8:12 PM
29 C
Chennai

காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

Must Read

செய்திகள் … சிந்தனைகள் … 04.07.2020

தில்லி கலவர பின்னணியில் ஜாகிர் நாயக் தொடர்பு இராணுவ மருத்துவ வசதிகள் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு இராணுவம் கண்டனம்

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.
police award காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

முதல்வர் பழனிசாமி நேற்று டிஜிபி திரிபாதி, கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் உட்பட சிறப்பாக பணிபுரிந்த 604 போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

edapadi 2 காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஷங்கர் ஜிவால், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி உதவி ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் பதக்கமும், தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தக்க பணிக்கான பதக்கமும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

police award 2 காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப்பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.

காஞ்சிபுரத்தில் நடந்த அத்தி வரதர் வைபவத்தின்போது பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக டிஜிபி ஜே.கே.திரிபாதி, வடக்கு மண்டல ஐஜி வரதராஜு உள்ளிட்டோருக்கு சிறப்புப் பதக்கங் கள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த விழாவில் மொத்தம் 604 போலீஸாருக்கு பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

தமிழக காவல் துறையினரின் சிறப்பான செயல் பாடுகளால், மாநிலம் முழுவதும் குற்ற நிகழ்வுகள் கணிசமாக குறைந்துள்ளன.

police award 1 காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

மாமல்லபுரத்தில் இரு பெரும் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக நமது காவல் துறையினரை பிரதமரும், சீன அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.

பொது இடங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதற்கு சென்னை மாநகரத்தில் மட்டும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 789 கண்காணிப்பு கேமராக்களும், மற்ற மாவட்டங்களில் 1 லட் சத்து 79 ஆயிரத்து 949 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தீவிரவாத இயக்கங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோதச் செயல்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. அத்திவரதர் வைபவத்தின் போது சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். தமிழகத்தில் 8,427 இரண்டாம் நிலை காவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This