
பிகில் படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் ஆத்திரப்பட்டனர் இதனால் ரணகளமானது கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதி
கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்களை உடைத்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்
ரவுண்டானா பகுதி அருகில் இருந்த போலீசார் வைத்திருந்த தடுப்பு வரிகளை எடுத்து சாலையில் தள்ளி அதன் மீது ஏறி சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர் மேலும் சில இடங்களில் தீ வைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து அந்தப் பகுதியில் இரவோடிரவாக அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரவு நேரம் என்பதால் சாலையில் இருந்த கற்களை கொண்டு அதிரடிப்படை போலீசார் மீது தாக்குதலிலும் அவர்கள் ஈடுபட்டனர் இது கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது