mattuthavani 1 - 2026

சமீபத்தில் களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையை தீவிரவாதிகள் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரவாதிகள் தற்போது வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

இந்த வேட்டையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னும் சிலரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தீவிரவாதிகளின் வேட்டை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி வந்தது.

periyar busstand 1 - 2026

அதில் மதுரை பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை காவல்துறையினர் தற்போது பேருந்து நிலையங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதுமட்டுமன்று மதுரையில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் களத்தில் இறங்கி சோதனை செய்து வருகின்றனர்.

இதுவரை எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை என்பதால் இது வெறும் மிரட்டலாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் இன்னும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending