வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர பாலபிஷேகம்

கரூர்: கரூர்  பகுதியின் புகழ் பெற்ற முருகன் மலைக் கோவில்களுள் ஒன்றான அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இருந்தே நூற்றுக் கணக்கான பால்குடங்கள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டன. மதியம் 12 மணியளவில் கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் முருகனுக்கு நடைபெற்றது. விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், பழ வகை, அரிசி மாவு, சந்தனம் என நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பால் அபிஷேகம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கரூர் நகரத்தார் சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன், கோயில் அறங்காவலர் சொக்கலிங்கம் செட்டியார், ராதா, கணேஷன் செட்டியார், கரு.ரத்தினம், வயிரவன், கைலாசம், மோகன், ராம்.மெய்யப்பன், அகல்யா.மெய்யப்பன், சீனிவாசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கரூர் நகரத்தார் சங்க செயலாளர் மேலை.பழநியப்பன் முருகன் பெருமை பற்றி பேசினார். அனைவருக்கும் அழகம்மை மஹாலில் மதிய விருந்தும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் 25 வது மாதமாக பொளர்ணமி கிரிவலம் நடைபெற்றது. அமர்ஜோதி ஆறுமுகம், கைலாசம் குழுவினர் கிரிவலத்தை முன்னின்று நடத்தினர்.