புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேஜே நகரில் பாஜக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அறந்தாங்கியில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நகரம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரசின் சார்பில் ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.ஆயிரம் நிதி வழங்கப்பட்டது
இந்நிலையில் அறந்தாங்கி நகரில் உள்ள 27 வார்டுகளில் ஆதரவற்றவர்களுக்கு நகர பாஜக நிர்வாகிகள் பிரதமர் தேசியதலைவர் மாநில தலைவர் ஆலோசனைப்படி அறந்தாங்கி நகர வங்கி துணை தலைவரும் முன்னாள் நகராட்சி துணை தலைவருமான முரளிதரன் தலைமையில் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நகரின் பல பகுதியில் உணவு தயாரித்து வழங்கிய நிலையில்
ஜேஜே நகர் பகுதியிலும் உணவு வழங்கினர் இதில் நிர்வாகிகள் சின்னையா,திருமலைகணேசன்,பரமசிவம்,அய்யப்பன்,வீரமாகாளியப்பன்,சுப்புராமன்,மாரிமுத்து,ரமேஷ். அதிபதி,மஞ்சு, செல்வி,சித்ரா,முத்துலட்சுமி, தீபன் இளங்கோ பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நகரவங்கி துணை தலைவர் முரளிதரன் கடந்த 25ந்தேதி முதல் தன் சொந்த செலவில் தனது நிறுவனத்தின் அருகில் தினசரி ஆதரவற்ற உணவின்றி உணவிற்காக காத்திருக்கும் நகர மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.மேலும் ஊரடங்கு தொடரும் வரை தன்னுடைய உணவு வழங்கும் பணி தொடரும் என்றார்.