அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் அவைதலைவர் பொன்துரை, பொதுக்குழு உறுப்பினர் கலைமணி மாவட்டகவுன்சிலர் பாக்யலட்சுமி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கலந்து கொண்டு 188 குடும்பத்தினருக்கு தலா ரூ.300 மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி, வக்கீல் கார்த்திகேயன் நகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சக்திராமசாமி, இளைஞரணி மணிராஜன், ரவிசந்திரன்,, முன்னாள் நகரசெயலாளர் ராசேந்திரன் முன்னாள் ஊராட்சி தலைவர் நல்லக்கூத்தன், ஆவுடையார்கோயில் கலைச்செல்வன்,பாரதிராஜா,ராமநாதன், கைலாசம் விமல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
