madhurai

மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் திரு.முகேஷ் குமார் என்பவர் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

22.05.2020-ம் தேதி அவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த ரூ.40,000/- பணத்தை தவிர விட்டுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரா் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணம் தொலைந்த 15 நிமிடத்தில் பணத்தை பறிகொடுத்தவரை கண்டுபிடித்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் முன்னிலையில் உரிய விசாரணை செய்து பணத்தை ஒப்படைத்தார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் விக்னேஷ்வரன் என்பவரின் நற்செயலை பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending