அறந்தாங்கி
அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மற்றும் வர்த்தகசங்கம் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தவசீலன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர் தங்கத்துரை செயலாளர் சத்ரு சங்கரவேல்சாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி கமிசினர் பாஸ்கரன் தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் கிருமி நாசினி அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம்,முரளிதரன்,விஜயசுந்தர்,
சலீம்,புவனா செந்தில்,சிவசுப்ரமணியன்,தாமஸ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்
