ஆவுடையார்கோயில் கைலாசநாதர்கோயிலில் ஆதீன அருளாசிப்படி குருபெயர்ச்சி விழா
ஆவுடையார்கோயில் நகருக்கு உட்பட்ட வடக்கூரில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவகாமசுந்தரி சமேத ஆதிகைலாசநாதர் கோயில் உள்ளது இக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் தனுசுராசியில் இருந்து மகரராசிக்கு பிரவேசிப்பதால் திருவாவடுதுறை 24வதுகுருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி குருபெயர்ச்சி ஹோமம் ஆவுடையார்கோயில் சிவாச்சாரியார்கள் அனைவரும் கலந்து கொண்டு வேதமந்திரம் சொல்ல நடந்தது.தொடர்ந்து ஆதிகைலாசநாதர் சிவகாமசுந்தரிக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை நடந்து இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்