spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ரூ.1 கோடி போதைப் பொருளை புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட 2 பேர் கைது

ரூ.1 கோடி போதைப் பொருளை புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட 2 பேர் கைது

twoarrestedசென்னை: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை சென்னையில் புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது… சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின்படி சென்னை மத்திய குற்றப் பிரிவின் ரவுடிகள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாரால் சென்னையின் பல்வேறு காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடிகளும், பிடி ஆணை நிலுவையில் உள்ள தலைமறைவுக் குற்றவாளிகளும் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல்களும் கண்காணிக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்நிலையில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவிற்கு நேற்று (24.3.2015) இரவு சென்னை புழல் பகுதியில் போதைப்பொருள் கைமாற்றும் கும்பல் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் பேரில் உதவி ஆணையாளர் திரு.தேவராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் திரு.நாகராஜ், திரு.இரத்னவேல்பாண்டியன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு.கமல் மோகன், திரு.இராஜசேகர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் அதிரடி திடீர் தணிக்கை செய்த போது சாமிநாதன், ஆ/24, த/பெ. ஹரிஹரன், எண். 14/21, இந்திராகாந்தி தெரு விஜயலட்சுமி புரம் அம்பத்தூர், சென்னை என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களான ஹெராயின் சுமார் ஒரு கிலோ, பிரவுன்சுகர் (மெஸ்கலைன்) சுமார் ஒரு கிலோ மற்றும் கேட்டமைன் சுமார் ஒரு கிலோ ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சாமிநாதன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டில் திருநின்றவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன் படித்தவர் என்பதும், இவரது பெற்றோர் இருவரும் தற்போது அரசுப் பதவியில் இருப்பவர்கள் என்பதும் தெரியவந்தது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்து சாமிநாதன் வேலை தேடிய போது கூடா நண்பர்கள் சிலர் பழக்கமானதாகவும், குறைந்த காலத்தில் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டியதாகவும், பிரபல சினிமா ஒன்றை பார்த்து அப்பட பாணியில் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துகளை கடத்தி விற்பதன் மூலம் விரைவில் பெரிய ஆளாக வரமுடியும் என்பதை நம்பியதகவும் அதனால் அந்தமான் பிரஜையான ராஜா தக்காளி ராஜா காணிக்கை ராஜா, ஆ/42, த/பெ. உடையப்பன், தஞ்சாவர் என்பவருடன் கடந்த 1½ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சென்னை திருநின்றவூர் வேப்பம்பட்டு பகுதியில் தங்கியிருந்தபோது பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் மூலம் பணத்தை கொடுத்து சிறிது சிறிதாக தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளான ஹெராயின், பிரவுன்சுகர் கேட்டமைன் ஆகியவைகளை பெற்று மாற்றியதாகவும், சில சமயங்களில் போலியான சரக்குகளுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் தெரிவித்தார். இழந்த பணத்தை மீட்க பெரிய அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைமாற்றினால் பெரும் பணம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஹெராயின், பிரவுன்சுகர் மற்றும் கேட்டமைன் ஆகியவைகளை கிலோ கணக்கில் வாங்கி வைத்திருந்ததாகவும் அதை கைமாற்றி விற்கும்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார். இவர் கொடுத்த தகவலின்பேரில் இவருக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்த பிரபல அந்தமான் பிரஜையான ராஜா @ தக்காளி ராஜா @ காணிக்கை ராஜா, எண். 1282, ஜெயமால்புரம், மேலவெளி, தஞ்சாவூர் என்பவரை பார்ட்டி சகிதமாக அவர் சென்னையில் தங்குமிடமான வேப்பம்பட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுற்றி வளைத்து நேற்று (24.3.2015) நள்ளிரவு கைது செய்தனர்யப்பட்டார். பின் அவர் வீட்டை அதிரடி சோதனை செய்த போது மறைத்து வைத்திருந்த 1 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கேட்டமைன் கைப்பற்றப்பட்டது. பின் விசாரணையில் இவர் அந்தமானில் பிறந்து சுமார் பத்துவயதில் அவரது தந்தை ராணுவத்தில் வேலை செய்தபோது சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் ஓட்டுனராகவும், கார் புரோக்கராகவும் வேலை செய்து வந்தவர், பின் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஆகவே பணத்தேவைக்காக போதைப்பொருள் கடத்தும் அறந்தாங்கியைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடர்பு கிடைத்ததாகவும், பின் அவர் மூலம் சரக்கை பெற்று கைமாற்றியதாகவும் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மொத்த போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி எனத் தெரிய வருகிறது. ஹெராயின்: இதை டயாமார்பின் என்ற வேதியியல் பெயரிலும் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக ”பஜ்ஜி’’, ’’சிறுவன்’’, ’’குதிரை’’, ’’பழுப்பு’’, ’’கருப்பு’’, ’’தார்’’ என்ற புனைப் பெயர்களில் அழைக்கிறார்கள். இது மருத்துவ உலகில் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. ஆனால் இதை சட்டவிரோதக் கும்பல் போதை ஏற்படுத்துகிற தீவிர பொழுது போக்கு மருந்தாக இளைஞர்களுக்கு மத்தியில் உலவ விட்டு கொள்ளை லாபம் அடைகின்றார்கள். பரவச நிலையை ஏற்படுத்தும் இந்த ’’ஹெராயின்’’ நாளடைவில் பயன்படுத்துபவர்களை அடிமையாக்கி அவர்களது சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து, உடல் தளர்வு, அயர்வு மற்றும் அதிக தூக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி விரைவாக மரணத்தை தழுவச்செய்கிறது. Mescaline @ பிரவுன்சுகர்: இது மருத்துவ உலகில் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. இந்த போதை மருந்தை பயன்படுத்துவோர் நாளடைவில் சுய உணர்வு அற்ற நிலைக்கு சென்று நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகி விரைவில் மரணத்தை கேட்டமைன்: இது மருத்துவத்துறையில் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள். இதை போதை மருந்தாக சட்டவிரோதமாக பயன்படுத்தினால் உயர் ரத்த அழுத்தம், மைய நரம்பு மண்டல பாதிப்பு, பசியின்மை, விழிநடுக்கம் மற்றும் மூச்சுத்தினறல் ஏற்பட்டு பின் மரணத்தை தழுவுகிறார்கள். மேற்கண்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தி விற்கும் கும்பலை அதிரடியாக 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்த தனிப்படையினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ், வெகுவாக பாராட்டினார். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும் தொடர்ந்து பிடிக்க தனிப்படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe