சென்னை: திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு ஒவ்வொரு மாதமும் கோயம்பேடு வியாபாரிகள் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். அதுபோல் நேற்றும் 10 டன் காய்கறிகளை அனுப்பி வைத்தனர். கோயம்பேட்டில் ஒவ்வொரு கடைக்காரரும் ஒரு மூட்டையாக, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளையும் வியாபாரிகள் கோயிலுக்கு வழங்கினர். இதுகுறித்து வியாபாரி சங்கத் தலைவர் சௌந்திரராஜன் கூறும்போது, ‘‘திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக சாப்பாடு வழங்கி வருகிறது. இதற்கு உதவ கோயம்பேடு வியாபாரிகள் மாதம்தோறும் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வியாபாரியும் 1 மூட்டை காய்கறியை இலவசமாகத் தருகிறார்கள். இதை மொத்தமாக லாரியில் ஏற்றி திருப்பதிக்கு அனுப்பி வைத்தோம். நேற்று மட்டும் 10 டன் காய்கறிகள் அனுப்பப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம். இந்தக் காய்கறிகள் 1 வார சமையலுக்கு போதுமானது. இதேபோல் பல்வேறு நகரங்களில் இருந்தும் திருப்பதிக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. நாங்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பதிக்கு அனுப்புகிறோம்… என்றார் அவர்.
திருப்பதி கோவிலுக்கு 10 டன் காய்கறி: இலவசமாக அனுப்பினர் கோயம்பேடு வியாபாரிகள்
சென்னை: திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு ஒவ்வொரு மாதமும் கோயம்பேடு வியாபாரிகள் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். அதுபோல் நேற்றும் 10 டன் காய்கறிகளை அனுப்பி வைத்தனர். கோயம்பேட்டில் ஒவ்வொரு கடைக்காரரும் ஒரு மூட்டையாக, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளையும் வியாபாரிகள் கோயிலுக்கு வழங்கினர். இதுகுறித்து வியாபாரி சங்கத் தலைவர் சௌந்திரராஜன் கூறும்போது, ‘‘திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக சாப்பாடு வழங்கி வருகிறது. இதற்கு…
1–2 minutes



Leave a Reply