மேம்பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி! CCTV காட்சி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
cctv - 2026

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே, புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் சி.சி.டி.வி. காட்சிகள், காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே, புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கீழே சுயநினைவின்றி விழுந்து கிடந்த நபரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

cctv2 - 2026

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் விழுந்து கிடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த நபர் பாலத்தின் மீது இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

cctv1 - 2026

முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் செந்தில் என்பது மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. அவரது முகவரி மற்றும் உறவினர்கள் விபரம் எதுவும் தெரியாத நிலையில், எதற்காக செந்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.