புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பல விதங்களில் அதிரடி காட்டி பெயர் எடுத்திருக்கிறார். இப்போது அதிர அதிர அடி கொடுத்தல் பற்றிப் பேசி அதிரடி காட்டியிருக்கிறார்.
சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் கிரண்பேடி. முதல்வர் நாராயணசாமியையும் சகாக்களையும் அச்சத்தில் வைத்திருப்பவர். ஊழல் தடுப்பு, கண்காணிப்பு எல்லாம் இவரின் தினசரி ரவுண்ட் அப்பிலேயே முடிந்துவிடுகிறது. இப்போது மகளிருக்கும் தன் தைரியத்தை அளிக்கும் நோக்கில், அதிரடியாக சில விஷயங்களை அறிவுரையாகச் சொல்லியிருக்கிறார்.
குடித்துவிட்டு கணவன் அடித்தால், அருகில் உள்ள 10 பெண்களைத் திரட்டி, ஒன்று சேர்ந்து கணவனைத் தாக்கி, மூக்கை உடைக்க வேண்டும். இப்படி, புதுச்சேரி மாநில காரைக்காலில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் புதுவை ஆளுநர் கிரண்பேடி பேசியிருப்பது, மாநிலத்தில் பலரையும் பயந்து போகத்தான் செய்திருக்கிறது. எப்போது வன்முறை வெடிக்குமோ என்று ஆண்கள் எல்லாம் அரண்டு போயிருக்கிறார்கள்!