sridevi 3 - 2026

ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்களை ஸ்ரீலதாவுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவுக்குச் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்துக்களைக் கொடுப்பதாக போனி கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாகச் சில முக்கியமான தகவல்களை வெளியிடப்போவதாக ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2 வாரங்கள் ஆன பின்னரும் அதுபற்றிப் பேசாமல் அவர் தொடர்ந்து அமைதி காக்கிறார்.

இதற்குக் காரணம் சென்னையில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான பங்களா உள்ளிட்ட சொத்துக்களை ஸ்ரீதேவிக்குக் கொடுப்பதாகக் கபூர் குடும்பம் உறுதி அளித்திருப்பதாகவும், அதனால் எதுவும் பேசாமல் அமைதி காக்க வேண்டும் என ஸ்ரீலதாவுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி சென்னையில் வாங்கிய சொத்துக்களை அவர் பெற்றோரின் பெயரில் பதிந்திருந்ததாகவும், இதனால் ஸ்ரீதேவிக்கும் ஸ்ரீலதாவுக்கும் இடையே ஏற்கெனவே சொத்துத் தகராறு இருந்ததாகவும், இந்நிலையில் அந்தச் சொத்துக்களை ஸ்ரீலதாவுக்கே விட்டுவிடலாம் என போனி கபூர் முடிவுசெய்துள்ளதாகவும் போனி கபூருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending