சேலம்: ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ஸ்டெர்லைட், நியூட்ரினோ எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்கள் தூண்டப்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புவதாக கூறினார். மேலும், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.