women constable drunken - 2026

ஏட்டம்மாவின் லீலைகள்… இதுதான் இந்த வீடியோ பிட்க்கு இந்த வீடியோவை பதிவு செய்த சக காவலர் வைத்த தலைப்பு. அதே தலைப்பையே நாமும் அளிக்கிறோம்.

ஆண் காவலர்களுடன் சேர்ந்து சக பெண் காவலர் ஒருவர் போதை ஏற்றி சீருடையுடன் காணப்படும் வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. அதுவும், சக பெண் காவலரின் போதை நிலையை ஆண் காவலர் ஒருவரே விடியோ எடுத்து வெளியிட்டதாகக் காணப்படும் வீடியோ….

ஆண் காவலர்களுடன் சீருடையில் தண்ணீ அடிக்கும் திண்டுகல் பெண் காவலர். வாடா போடா,வாடி போடி என கல்லூரி மாணவ மாணவிகள் போல் பேசி கொள்ளும் அவலம் ! – என்ற வாசகங்களுடன் இது வாட்ஸ் அப்பில் வைரலானது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் திண்டுக்கல்லில் பணியின்போது மது அருந்திய பெண் காவலர் ஜெய்னுப் நிஷா பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending