சென்னையில் ஹெல்போடாமல் சென்ற இளைஞரை மூன்று போலீசார் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற இளைஞர் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கையோடு சென்றுள்ளார்.
3 பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும், ஹெல்மெட் போடாததாலும் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சட்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.
அப்போது, என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாய் ஆய்வாளரை தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார். இதில் அவர் தோளில் இருந்த ஸ்டார் உடைந்து கீழே விழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.