சென்னை புரசைவாக்கத்தி உள்ள குடியிருப்பு ஒன்றில், வாய் பேச இயலாத மாற்றுத் திறளாளிச் சிறுமியை உடல் நிலையை சாதகமாக்கி பலவீனப்படுத்தி, பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த செக்யூரிடிகள், காவலாளிகள், லிஃப்ட் ஆபரேடர்கள் ஆகிய அந்த 17 பேரையும், என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால்… அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது, விரைவில் வழக்கை முடிக்க வேண்டும், விரைந்து தண்டனை கொடுக்க வேண்டும், சொல்லப் போனால் தூக்கில்தான் போடணும் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
மேலும், சினிமா திரையரங்குகளில் எடப்பாடி பழனிசாமி சாமி சாமி என்றெல்லாம் படத்தைப் போட்டு ஓட்டுவதற்கு பதில், குழந்தைகள் வளர்ப்பு, பழக்கம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களை போட வேண்டும் என்றார் அன்புமணி!



Leave a Reply