சென்னை: இன்றைய பாஜக., உள்ளிட்ட இந்து இயக்கங்களின் டிவிட்டர் ட்ரெண்டிங் பொன்.மாணிக்கவேலுக்காக! #IsupportPonmanickavel என்பதுதான்! #ISupportPonManickavel
சிலைக் கடத்தல் வழக்குகள் ஐஜி. பொன் மாணிக்கவேல் மூலம் விசாரிக்கப் பட்டு வந்த நிலையில், அவரை இடமாற்றம் செய்ய முயன்றது தமிழக அரசு. ஆனால் நீதி மன்றம் தலையிட்டு, அவரது இடமாற்றத்தை ரத்து செய்த நிலையில், அவரிடம் இருந்து இந்த வழக்கை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று முயன்றது தமிழக அரசு.
அதற்கு ஏற்ப, அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா இரு தினங்களுக்கு முன் அதிரடியாகக் கைது செய்யப் பட்டார். இதன் பின்னணியில் பல திடுக்கிடும் செய்திகள் வெளியான நிலையில், தற்போது தமிழக அரசே தாமாக முன் வந்து, விசாரணையை சிபிஐ.,க்கு பரிந்துரைப்பதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்து, இன்று அறிவிப்பாணையும் வெளியிட்டது. அதற்குக் காரணமாக, பொன் மாணிக்கவேல் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஒரு வருடமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் விசாரணையைத் தொடரவும், சிபிஐ., விசாரணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து இயக்கங்களின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை உறுதிப் படுத்தும் வகையில் இன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை, டிவிட்டர் சமூக வலைத் தளத்தில், #ISupportPonManickavel இந்த ஹேஷ் டாக் போட்டு டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, சிலை கடத்தல் விசாரணையை திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யவும்,நேர்மையான அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்களை உதாசீனம் செய்து கோவில் கொள்ளையை மறைக்கவும் முயலும் அரசின் போக்கை எதிர்த்து ஃபேஸ்புக், ட்விட்டரில் நமது கருத்துக்களை டிரெண்ட் செய்வோம்… என இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.
இன்று மாலை 5 _ 7#IsupportPonmanickavel
சிலை கடத்தல் விசாரணையை திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யவும்,நேர்மையான அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்களை உதாசீனம் செய்து கோவில் கொள்ளையை மறைக்கவும் முயலும் அரசின் போக்கை எதிர்த்து ஃபேஸ்புக், ட்விட்டரில் நமது கருத்துக்களை டிரெண்ட் செய்வோம்.— Hindu Munnani (@hmrss1980) August 2, 2018




