தமிழ் வளர்த்தது யார் என்பதுதான் இப்போதைய சூடான விவாதம். இந்த விவாதத்துக்கு வித்திட்டது, அண்மைக்கால டிவிட்டர் ட்ரெண்டுகள்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்த போது, காவிரி விவகாரத்தை முன்னிலைப் படுத்தி, மத்திய அரசு ஏதோ தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவது போன்ற மாயையை ஏற்படுத்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்றன. அதற்காக, டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் கோபேக் மோடி #GoBackModi என்று ஆங்கிலத்தில் ஹேஷ் டேக் இட்டு, டிவிட்டரில் பிரபலப் படுத்தினார்கள்.
ஆனால், அதற்கு பதிலடியாக, பாஜக., ஆதரவாளர்கள், தமிழில் ஹேஷ்டேக் போட்டு, தேசிய அளவில் அதனை பிரபலப் படுத்தி, ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழி மக்களும் இந்த தமிழ் ஹேஷ் டேக்கை பயன்படுத்த வழி செய்தனர்.
அவ்வாறு #இடுப்புகிள்ளிதிமுக, #ஓசிபிரியாணிதிமுக, #கள்ளதுப்பாக்கிதிமுக, என தமிழில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப் படுத்தினர். இப்போது இதுதான் விவாதமாக மாறியுள்ளது. டிவிட்டரில் தமிழ் வளர்த்தவர்கள் காவியா கறுப்பா? என்று!