சென்னை: காவேரி மருத்துவமனையில் கடும் மூச்சுத் திணறலால் திமுக தலைவர் கருணாநிதி அவதிப் படுகிறார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
ஆபத்தான கட்டத்தில் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு குறைகிறது என்றும் கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. இதை அடுத்து, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மு க ஸ்டாலின், மு க அழகிரி, கனிமொழி, டிஆர் பாலு ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
முதல்வருடனான சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து மருத்துவமனைக்கு திரும்பினார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது, பரபரப்பான நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகம் முன்பு தொண்டர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
மெரீனா பீசà¯à®šà¯à®² இடம௠கேடà¯à®Ÿà®¾à®°à¯à®•ளா ?