சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ல திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை இன்று மாலை 4.30க்கு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த சில மணி நேரங்களில் கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச மருத்துவ சிகிச்சை உதவி அளித்த பிறகும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து காவேரி மருத்துவமனை வளாகம் பெரும் பரபரப்படைந்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு இரவு 7 மணிக்கு மேல் வெளியாகலாம் என்று கூறப்பட்டது.