சென்னை: இனி ஜோடியா மெரினா பீச்சுக்கு காத்து வாங்க போறீங்களா? அப்படி என்றால் உங்கள் பர்ஸ் வீங்கிவிடும் எச்சரிக்கையாக இருங்கள்!
காரணம், ஜோடியாக வருவர்கள் பீச்சில் கடலைப் பார்த்துக் கொண்டு, அதிக நேரம் கடலை போடுவதால், கடலை வாங்குவது கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் இனி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுவரை, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் டூவீலரை நிறுத்திவிட்டு, கார்களை ஓரங்கட்டிவிட்டு, வாக்கிங் போவதில் இருந்து கடற்கரை மணலில் கால் புதைத்து, கடலில் இறங்கி கால் நனைத்து விளையாடுவது வரை பலருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியான ஒரு அம்சமாக மாறிப் போயிருந்தது.
இந்நிலையில், கடற்கரைக்கு வரும் கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20ம், பைக்கிற்கு ரூ. 5ம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த அறிவிப்பு மெரினா காதலர்கள் பலரது வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.