நாகர்கோவிலில் கடைகளை அடைக்கச் சொல்லி திமுக.,வினர் போர்க்கொடி தூக்கினர். இதனால் போலீஸாருக்கும் திமுக.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் என முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நாகர்கோவிலில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி திமுகவினர் வற்புறுத்தினர். அப்போது கடையில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசினர். ஒரு கடையில் வெளியில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்களை வெளியில் தூக்கி வீசி சேதப் படுத்தினர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் திமுக.,வினரை தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போகச் சொல்லி வற்புறுத்தினர். ஆனால் திமுக.,வினர் சாலையிலேயே அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் திமுக.,வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தங்களை ஒருமையில் பேசி, தகாத வார்த்தியில் திட்டியதாக தொடர்ந்து திமுக.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.