radhakrishnan J - 2026

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள், சிகிச்சைல் தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையத்திடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே கொடுத்திருந்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான மருத்துவ அறிக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் இறுதி செய்த பின்னரே செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டது என்று அப்போலோ அளித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் ஆணையத்தில் பலரும் முன்வைத்த சில கேள்விகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending