திரிபுரா போல் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும்: நிர்வாகிகளுக்கு மோடி கட்டளை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

IMG 20181219 WA0020 - 2026

திரிபுரா மாநிலத்தில் வெற்றி பெற்றதைப் போன்று தமிழகத்திலும் பாஜக வெற்றிபெற வேண்டும் இன்று பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார் .. பாஜக

பாஜக நிர்வாகிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். கேரளம் தமிழகம் புதுவை என நிர்வாகிகளுடன் மோடி நடத்தும் கலந்துரையாடல்களுக்கு கட்சியினர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நிர்வாகிகள் ஆர்வமுடன் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் .

இந்த நிகழ்ச்சியின்போது நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்வேகமூட்டும் விதத்தில் சில தகவல்களை கூறுகிறார் … மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் சலுகைகள் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டத்தின் பலன்கள் இவற்றை மக்கள் மத்தியில் பிரபலமாக மக்களிடம் திட்டத்தின் பலன்கள் குறித்து எடுத்துக் கூறி அவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நிர்வாகிகளுக்கு கட்டளையிடுகிறார்.

மேலும் காங்கிரஸ் அரசில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களுடன் கூடிய சுயநல திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை எடுத்துக் கூறி காங்கிரசின் நயவஞ்சகத்தை வெளிப்படுத்துமாறும் கூறுகிறார்…

இன்று தமிழகம் புதுச்சேரி ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் கலந்துரையாட நிகழ்த்திய பிரதமர் மோடி மேற்கண்ட விவரங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்…

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

 அப்போது பேசிய அவர்  நாட்டின் ஜனநாயகத்தை காப்பவர்கள் மக்கள்தான்; காங். தனது தந்திரத்தால் அதை அழிக்கப் பார்க்கிறது…. என்றார்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

Related articles

Recent articles

spot_img