18 June28 Blood donation - 2026

சென்னை அருகே மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது.

செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில் எச்.ஐ.வி.யால் தாய் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம் மூலம் எச்.ஐ.வி. பாதிப்பு என பெண் புகார் கூறியுள்ளார்

ரத்த வங்கி ஊழியர்களின் மெத்தனத்தால் துயரத்தில் ஆளானதாக பெண் வேதனை தெரிவித்துள்ளார்

தமிழக அரசு தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என சென்னை பெண் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை மறுத்து மருத்துவமனைடீன் விஜயா தகவல் வெளியிட்டார்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றியதாக பெண் புகார் அளித்த விவகாரத்தில், அந்த பெண்ணிற்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை டீன் விஜயா கூறினார்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அளித்த ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இல்லை. அதேபோல் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் ரத்த பரிசோதனை செய்ததற்கான ஆதாரமும் இல்லை என்று மருத்துவமனை டீன் விஜயா செய்தியாளர்களிடம் கூறினார் இரத்தம் ஏற்றுதல் கர்ப்பிணிப்பெண் எச்ஐவி தொற்று என கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending