16 June03 high court - 2026

மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக வரவேற்பு வளைவு கட்டுவது குறித்த அரசின் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கின் விசாரணையின் போது உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ”எந்தத் திட்டத்தின் கீழ் நினைவு வளைவுகள் அமைக்கப் படுகின்றன?” என்று கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், நாளை பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சென்னையில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது உயர் நீதிமன்றம்! எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending