மதுரையை முடக்குவோம் போராட்டத்துக்கு பாஜக., ஆதரவா?!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
thevarinadesabakthamunnani met srinivasan - 2026

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இந்தக் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்திருக்கிறார்கள். வெகுகாலமாக இதற்காக போராட்டங்களும் நடத்தப் பட்டு வந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை இப்போது வலுப்பெற்றுள்ளது. தேவரின தேசபக்த முன்னணி சார்பாக பாஜக., மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் இரா.சீனிவாசன் உடன் ஒரு குழு சந்தித்து, வரும் 20ஆம் தேதி நடத்தவுள்ள பந்த்க்கு ஆதரவு கேட்டனர்.

பாஜக., சார்பில் ஆதரவு குறித்து தலைமைக்கு தெரியப்படுத்துவதாகவும், தலைமை அளிக்கும் பதிலைப் பொறுத்து, நல்ல தகவல் தருவதாகவும் அவர் கூறியதாக, தேவரின தேசபக்த முன்னணியினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.