சென்னையில் திருட்டு விசிடி தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

Faizal Rahmanசென்னை: சென்னையில் திருட்டு விசிடி தயாரித்து விற்றவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது…. சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பைசல் ரகுமான் (32) வாடகைக்கு வீடு எடுத்து, ரெகார்ட் செய்யும் தொழில்நுட்ப இயந்திரங்கள் மூலம் புதிய திரைப்படங்களின் விசிடிக்களை தயாரித்து விற்று வந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீஸார் கடந்த மாதம் 28-ஆம் தேதி பைசல் ரகுமானை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பதிவு இயந்திரங்களும், 10,725 திருட்டு விசிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் பைசல் ரகுமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.