சிறையில் விசாரணை கைதி சாவு

tsi lock up தென்காசி கிளை சிறையில் விசாரணை கைதி மரணம் சுரண்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரை கொலை முயற்சி வழக்கில் சுரண்டை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தென்காசி கிளை சிறையில் அடைத்தனர் ராஜ்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த ராஜ்குமார் நேற்று காலையில் சிறையில் மயங்கி விழுந்துள்ளார் சிறைக்காவலர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார்இறந்து விட்டார் என தெரிவித்தனர் சிறையில் இருந்த விசாரணை கைதி திடீரென இறந்தது சிறைத்துறை மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமாரை போலீசார்தாக்கியதால் அவர் இறந்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என பிரேத பரிசோதனையில்தான் தெரிய வரும். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் தென்காசி, சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.