edappadi pazhanisamy - 2026தமிழகத்தில் கூட்டுறவு வங்களில் நெசவாளா்கள் வாங்கிய வீட்டுக்கடன் 65கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனத் தோ்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சூலுார் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது.

இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது வெற்றி விழா கூட்டம் போல இருக்கிறது. அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவு செய்து, நானே வந்த அதை துவக்கி வைப்பேன் என்றும் கோதாவரி–காவிரி திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழகம் இன்னும் வளம் பெறும் என்றும் அவா் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் விசைத்தறி தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட 65 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நெசவாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வீடு கட்ட கடன் வாங்கிய அசல், வட்டி போன்றவற்றையும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து அவா் பேசும்போது ஸ்டாலின் குடும்பம் மட்டுமே 40 டி.வி சேனல் வைத்து நடத்தி வருகின்றனா். அந்த கூட்டணியில் இருப்பவா்கள் வைத்திருக்கும் சேனல்களின் கட்டணத்தை குறைத்தாலே கேபிள் கட்டணம் குறைந்து விடும். அதிமுக ஆட்சியில் கேபிள் டி.வி கட்டணம் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

மேலும் இந்த தோ்தலில் போட்டி திமுக,,அதிமுகவிற்கும் மட்டுமேதான் என குறிப்பிட்ட அவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி குழப்பி கட்சியை வளர்க்க பார்க்கிறார் என குற்றம்சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending