திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்;மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு…!

Published:

therunangi marrug - 2026

மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவை தொடர்ந்து துாத்துக்குடியில் ஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி சங்கரபேரி பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து கடந்த ஆண்டு துாத்துக்குடி சிவன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்த இவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக துாத்துக்குடி சார்பதிவாளா் அலுவலகத்திற்கு சென்றனா்.

அப்போது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்-ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்வதற்கு வழிவகை இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது.

இதனை தொடா்ந்து அவர் பலகட்டங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடத்தில் புகார் அளித்தார்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும என்றும் கலப்பு திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை தொடா்ந்து இன்று அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினா் துாத்துக்குடி சார்பதிவாளா் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் பூா்த்தி செய்து கொடுத்தனா், அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமணப் பதிவு சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது.
.
தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண்-திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதன்முறை, ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினா்.

Related articles

Recent articles

spot_img