அந்தரங்கத்தை படம் பிடித்த அறநிலையத் துறை அதிகாரி! பச்சையப்பன் கைது!

உள்ளூர் செய்திகள் தமிழகம் புகார் பெட்டி மதுரை

PACHIYAPPAN EO - 2026

மதுரையை அடுத்த சதுரகிரிமலை கோவில் தங்கும் விடுதியில் பெண் அதிகாரி குளிப்பதை கேமராவில் படம் பிடித்த இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது செய்யப்பட்டார்.

மதுரையை அருகே உள்ள சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் அமாவாசை முடிந்து அங்குள்ள உண்டியல்களில் பக்தா்கள் அளித்துள்ள காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இந்த பணிக்காக இந்துசமய அற நிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர் வந்துள்ளார். அவர் மலை மீது ஏறி, அங்கு கோவில் அருகில் உள்ள வி.ஐ.பி.க்கள் தங்கும் அறையில் தங்கினார்.

பின்னர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார். உண்டியல் எண்ணும் பணி முடிய இரவு நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே உணவருந்திவிட்டு அந்த பெண் அதிகாரி வி.ஜ.பி.க்கள் அறையில் அன்று இரவு தங்கிவிட்டார்.

பின்னர் காலையில் பெண் அதிகாரி குளித்துவிட்டு வெளியே வந்தபோது, அந்த அறையில் ஒரு ஆணின் உடை தொங்க விடப்பட்டிருந்தது. அதில் 2 செல்போன்கள் இருந்தன. அதில் ஒரு செல்போன் பெண் அதிகாரியை நோக்கி படம் பிடிப்பது போன்று இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி உடனே அந்த செல்போனை எடுத்து பார்த்தள்ளார். அந்த செல்போன் கேமரா இயங்கிய நிலையில் காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி சந்தேக்கப்பட்டு குளியல் அறையில் இருந்த உடைகளை சோதனை செய்துள்ளார். அதில் பேனா கேமராக்கள் இருந்துள்ளது.

அதில் ஒரு பேனா கேமரா இயங்கிக்கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி அந்த பேனா கேமராவை எடுத்து வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் மலையில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற உடன் பேனா கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்து தனது மடிக்கணினியில் போட்டு பார்த்து உள்ளார்.

அதில் அந்த பெண் அதிகாரியும், மற்றொரு பெண் ஊழியரும் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதை பார்த்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடம் புகார் செய்தார். பின்னர் மதுரை டி.ஐ.ஜி.யிடமும் அவர் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பெண் அதிகாரி தங்கிய அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன்தான், பெண் அதிகாரியும், மற்றொரு பெண் ஊழியரும் குளிக்கும் போது கேமராவில் படம் பிடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இந்துசமய இணை ஆணையரிடம் போலீசார் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துசமய இணை ஆணையர் பச்சையப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த இணை ஆணையா் பச்சையப்பன் சதுகிரி மலையில் பக்தா்களால் நடத்தப்பட்டு வந்த அன்னதான கூடங்களை மூடவைத்து தனியார் கடைகளுக்கு அனுமதி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவா் என்பது குறிப்பிடதக்கது.

இந்த சம்பவம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.