கன்னத்தில் மச்சம் கொண்ட சென்னை வானகரம் முருகன் – பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர ஒரு திருத்தலம்

சென்னை – போரூர் தோட்டம் தொழிற்பேட்டை அருகே உள்ளது வானகரம். இங்குள்ள மச்சக்கார பால முருகன் கோயில் வெகு பிரசித்தம். இத்தல முருகனின் கன்னத்தில் சிவந்த மச்சம் இருப்பதால் இவருக்கு இந்த பெயர். இவரை வணங்கி திருமணத் தடை நீங்கி, மணமுடித்தவர்கள் விவரம் ஒரு பேரேடு முழுக்க விரவிக் கிடக்கிறது. 

இத்தலத்தில் பைரவர் தம்பதி சமேதராய் வீற்றிருப்பதால் அஷ்டமி திதியன்று இங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவார்கள்.  கடன் பிரச்னைகளும் தீர்கிறது.