முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்! தனிக்கட்சி பற்றி ரஜினி முடிவு!

சென்னை
rajini 2 - 2026

சென்னை:ரஜினி பாஜக வின் ஆதரவாளர் என தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளால் ரஜினி வேதனை அடைந்து இருப்பதாகவும். இதனால் தான் ஒரு பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை தனது ஆதரவாளர்களிடம் ஏற்படுகிறது எனவும் தனது மன்ற நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன,

1996ம் ஆண்டில் தொடங்கி சுமார் 21 ஆண்டுகள் ரஜினி அரசியலுக்கு வருவது கூறித்து பரபரப்பாக ஊடகங்கள் பேசிக்கொண்டே இருந்தன. ஆனால் ரஜினி ஒரு முறைகூட வருவேன் என்றோ வரவே மாட்டேன் என்றோ எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை.

rajini 3 - 2026

கடந்த 2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி கட்சி ஆரம்பிப்பேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றினார். கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சட்டசபை தேர்தலை சந்திப்பேன் என்றும் அப்போது அறிவித்தார்.

rajini 1 1 - 2026

ஆனால் ரஜினி அரசியல் வருகை குறித்து சொல்லிவிட்டு மீண்டும் நடிப்பிற்கு சென்றுவிட்டார். . இதனால் லோக்சபா தேர்தல் நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. . ஆனால் அவர் சொன்னது போலவே சட்டசபை தேர்தலை நோக்கி பயணித்து வருகிறார்.

அதற்காக அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி வியூகம் குறித்தும், நிகழ்கால அரசியல் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், தனது வீட்டில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பபடுகிறது.

rajini amith sha - 2026

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போது பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசினாராம்.

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மக்கள் மன்றத்தின் பணிகள் குறித்தும் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாகவும். அடுத்த ஆண்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசித்தாராம். அதற்கான இடம் குறித்தும் ஆலோசனை நடத்தினாராம்.

rajini - 2026

மேலும் பாஜகவுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாகவும் ஆன்மிகப்பாதையில் பயணிப்பேன் என்பதால் சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் ரஜினிகாந்த் வருத்தப்பபட்டாராம்.

மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்து தான் பின் வாங்கப் போவதில்லை என்று கூறினாராம் இந்த தகவலை அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.