புதுச்சேரி:
புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹௌஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம் நடத்தப்படுகிறது. ஹாஷ் ரன் எனப்படும் ஓட்டம் கடந்த 1938-ம் ஆண்டு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில நடத்தப்பட்டு தற்போது முதன்முறையாக புதுச்சேரியில் ஹாஷ் சுற்றுலா சாகச ஓட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து சுறறுலா அமைச்சர் பெ.ராஜவேலு கூறியதாவது:
புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், அதிக வெளிநாட்டவரை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் பர்வீன் ஹாலிடேஸ் நிறுவனத்தினருடன் இணைந்து சுற்றுலா துறை இதை நடத்துகிறது. இதற்காக மொத்தம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்ப்டுடள்ளது. அமெரிக்கா, கொரியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்த மற்றும் நீண்ட தூர ஓட்டங்கள் என இதில் மொத்தம் 3000 பேர் பங்கேற்கின்றனர். இதன் நிறைவு நிகழ்ச்சி லேபாண்டி ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
சென்னை ஹாஷ் அமைப்பு நிர்வாகி சசி சர்மா கூறியதாவது:
ஹாஷ் ஓட்டத்தில் மொத்தம் 6 வகைகளில் நடத்தப்படுகிறது. குறைந்த தூரமாக 3 முதல் 5 கி.மீ தூரமும், நீண்ட தூரமாக 26 கி.மீ தூரமும் சாகச ஓட்டமாக நடத்தப்படும்.

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending