dargah flag in thiruparankundram hill - 2026

கோயில் இடத்தில் தர்கா கொடி; நீதிபதி சொன்னதால் புகார் பெற்று வழக்குப் பதிவு!

மதுரை சற்றுமுன் புகார் பெட்டி
dargah flag in thiruparankundram hill - 2026

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பில் புகார்!

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கொடி கட்டியதாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி உள்ளே நுழைதல், பொது அமைதிக்கு பங்கம் இழைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.

அந்த மரம் மற்றும் அந்தப் பகுதி அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு அனுமதியின்றி கொடி கட்டியது சட்டவிரோதமானது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கோவில் உள்துறை நிர்வாக அதிகாரி சத்திய சீலன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, மலை மீதுள்ள தர்கா முன், பிறை போட்ட கொடி உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன், அருகில் உள்ள கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்திலும் தர்காவை சேர்ந்த சிலர் கொடி கட்டினர். இதுகுறித்து, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், ‘கோவில் இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், கொடி ஊன்றப்பட்டுள்ளது’ என, கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், போலீசில் புகார் செய்யுமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன், போலீசில் புகார் அளித்தார்.

நீதிபதி உத்தரவிடாவிட்டால் மலையை ஆக்கிரமிக்கும் தர்கா நிர்வாகத்தின் சதிச் செயலுக்கு திமுக., அரசின் அறநிலையத்துறை உடந்தையாக இருந்து திருப்பரங்குன்றம் மலையையே அவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்றும், இந்து மக்களின் உரிமையான மலையை ஓட்டுக்காக அவர்கள் வசம் அள்ளிக் கொடுத்திருக்கும் என்றும் மக்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.