சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் களப்பயணம்

சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர் பள்ளியிமாணவர்கள் களப்பயணம்
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர்மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் களப்பயணத்திற்காக வாட்டர் பார்க்கிற்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர் இக்களப்பயணத்தில் பள்ளி தாளாளர் சிவடிப்ஜினிஸ்ராம், குழல்வாய்மொழியம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை தலைவர் சிவபபிஷ்ராம், பள்ளி முதல்வர் பொன்மனோனியா, மற்றும் புஷ்பா முதலியோர் கலந்து கொண்டனர் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி, செயல்திட்ட முறையில் அனுபவ அறிவு பெறுவதற்காகவே இக்களப்பயணம் திட்டம் துவங்கப்பட்டது
தண்ணீரில் ஒருவர் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கேட்டு தெரிந்துகொண்டனர் மிகுந்த பாதுகாப்பான முறையில் வாட்டர் பார்க்கில் விளையாடி மகிழ்ந்தனர் மேலும், சுற்றுப்புறத்தை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ,தண்ணீரின் அவசியத்தையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்