28-04-15 Tasmac Leave News photo 02 கரூர்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1- ல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளனர். மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்., வரும் மே-1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும். அன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending