darmapurisamudram aid - 2026

தர்மபுரி தினமணி பதிப்பில் நிருபராக இருந்தவர் சமுத்திரராஜன். திருச்சியில் குடும்பத்தினர் இருந்த நிலையில் சமுத்திரராஜன் மட்டும் தருமபுரியில் தங்கி பணியாற்றி வந்தார்.

கடந்த நவம்பர் மாதம் தர்மபுரி அலுவலகத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இருக்கையிலேயே சமுத்திரராஜன் மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே சமுத்திரராஜன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மறைந்த நிருபர் சமுத்திரராஜனுக்காக எக்ஸ்பிரஸ் குழுமப் பணியாளர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பாக 7.64 லட்ச ரூபாய் பணம் சேர்ந்தது.

அந்த தொகைக்கான காசோலையை திருச்சி தினமணி அலுவலகத்தில் மறைந்த நிருபர் சமுத்திரராஜனின் குடும்பத்தாரிடம் மேலாண் இயக்குனர் சித்தார்த் சொந்தாலியா வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending