ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் ! பள்ளி கல்வித்துறை !

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கல்வி சென்னை தமிழகம்

.

edu dpt1 - 2026
கோப்பு படம்

அரசுப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆவது வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால், இதனைப் போக்க பள்ளிக் கல்வித்துறை புதிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, 2449 முதுகலை பட்டதாரிகளை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.

dse - 2026
கோப்பு படம்

இந்த அறிவிப்பில் தற்போது உள்ள காலிப் பணியிடங்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்ப அதிக காலதாமதம் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிக பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் 10ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு தற்காலிக பணியில் இருப்பார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

edu dpt - 2026
கோப்பு படம்

இந்தத் தற்காலிக ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம். இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 11 பாடப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தேர்வு செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் மற்றும் மூத்த ஆசிரியர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அந்தந்த பள்ளிகளில் நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள 2499 காலிப் பணியிடங்களில் அதிகபட்சமாக வேலூரில் 198 காலி இடங்களும், விழுப்புரத்தில் 186 காலி இடங்களும், திருவண்ணாமலை 169 காலி இடங்களும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.